தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா தொடக்க காலத்தில் 50%ற்கும் மேல் எரிபொருள் விற்பனை சரிவு' - பயோ கேஸ் தொழிற்சாலை

நாமக்கல்: 2023ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் உயிரி எரிவாயு ஆலைகள் உருவாக்கி, அதன் மூலம் 15 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி எரிவாயு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மாநிலத் தலைமை அலுவலர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஆயில்
இந்தியன் ஆயில்

By

Published : Jul 17, 2020, 12:25 AM IST

நாமக்கல் மாவட்டம், புதுசத்திரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சிபிஜி உயிரி எரிவாயு பயன்பாடு குறித்த செயல் விளக்கம் மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநரும் மாநிலத் தலைமை அலுவலருமான ஜெயதேவன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு, சிபிஜி உயிரி எரிவாயுவின் சிறப்பம்சங்கள், உற்பத்தி செய்யப்படும் விதம்,‌ பாதுகாப்பாக சேமித்தல், அவற்றை வாகனங்களுக்கு நிரப்புதல் குறித்து செயல் விளக்கங்கள் அளித்துப் பேசினார்.

அப்போது சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தாத வகையில் கோழி எச்சம், மாட்டுச் சாணம், பழங்கள் மற்றும் கரும்புக் கழிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு; காற்றில்லாத செரிமானம் என்ற வேதியியல் முறையில் சிபிஜி உயிரி எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டு மத்திய அரசு நீடித்த நிலையான மாற்று எரிபொருளை போக்குவரத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் உயிரி எரிவாயு ஆலைகளை உருவாக்கி, அதன் மூலம் 15 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி வாயு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் கரோனா தொற்று தொடக்க காலத்தில் 50 விழுக்காடு அளவிற்கு பெட்ரோல், டீசல் விற்பனை சரிவடைந்த நிலையில் எல்பிஜி கேஸ் விற்பனை 10% உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது இந்தியா முழுவதும் உயிரி எரிவாயு‌ ஆலைகளை நிறுவ 600 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் 309 நிறுவனங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ஆலைகளைத் தொடங்க முன்வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 13 நிறுவனங்கள் உயிரி எரிவாயு உற்பத்திக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அடுத்த மாதம் கடலூரில் புதியதாக மற்றொரு உயிரி எரிவாயு ஆலை அமைவதற்கானப் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details