தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் வாடகை லாரிகளை மோசடி செய்து விற்ற 4 பேர் கைது! - crime news

வாடகைக்கு எடுத்த 13 லாரிகளை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாரிகள், கார்கள், ரூ.3 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

By

Published : Jul 17, 2021, 6:24 AM IST

நாமக்கல்: திருப்பூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (31). இவரிடம் கடந்த மார்ச் மாதம், திருச்செங்கோடு வீடில்லாதோர் சங்க காலனியை சேர்ந்த ஷேக் சிக்கந்தர் இரண்டு லாரிகளை வாடகைக்கு பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வாடகை தராததால், லாரியை ஒப்படைக்குமாறு மோகன்ராஜ் கூறியுள்ளார்.

லாரிகளை தரமறுத்த ஷேக் சிக்கந்தர், அவற்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு காவல்நிலையத்தில் லாரிகளை மீட்டுத்தரக்கோரி மோகன்ராஜ் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு தலைமையிலான காவலர்கள், ஷேக் சிக்கந்தரை பிடித்து விசாரித்தனர்.

13 லாரிகளை விற்றது அம்பலம்

மீட்கப்பட்ட லாரிகள்

விசாரணையில் பல்வேறு நபர்களிடம் வாடகைக்கு பெற்ற 13 லாரிகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

4 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

மேலும் இதில் தொடர்புடைய ரவி (43), கண்ணன் (55), நந்தகுமார் (23), பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட 11 லாரிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. மோசடியில் ஈடுபட்டு லாரிகளை விற்பனை செய்த பணத்தில் வாங்கிய 1 புது லாரி, 2 கார்கள், ரூ. 3 லட்சம் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details