நாமக்கல் அருகேயுள்ள சிவியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன். கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி காலமான செல்லப்பனாரின் நினைவாக, ஏழு அடி உயரம் கொண்ட முழு வெண்கலச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் மற்றும் தமிழ் ஆய்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா, சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டிமேடு சிலம்பொலி நகரில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனாரின் வெண்கலச்சிலை 7 அடி உயரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், அவருடைய நினைவு மணி மண்டபம் ரூ.20 லட்சம் மதிப்பிலும், தமிழ் ஆய்வு மையம் ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில், கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. தமிழாய்வு மையத்தில் சிலம்பொலியார் பயன்படுத்திய மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இந்த மையம் வெளிநாடு, உள்நாட்டு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.