தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அப்பாடா... இப்போதான் சரியான விலை கிடைச்சிருக்கு' - பூ விலையால் மகிழ்ந்த விவசாயிகள்

நாமக்கல்: பூக்கள் ஏலச் சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

formers-are-happy-with-increasing-flower-rate
formers-are-happy-with-increasing-flower-rate

By

Published : Feb 19, 2020, 10:24 AM IST

நாமக்கல் மாவட்டம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான எருமப்பட்டி, வளையப்பட்டி, அலங்காநத்தம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிா் செய்துள்ளனா். இங்கு விளையும் பூக்களை நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

இந்தப் பூக்களை நாமக்கல், மோகனூர், வேலூர், ஜேடர்பாளையம், கபிலா்மலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ 240 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ ரூ.80க்கும், அரளி கிலோ ரூ.80க்கும், ரோஜா கிலோ ரூ.140க்கும், பெங்களூரு மல்லி கிலோ ரூ.280க்கும், செவ்வந்தி கிலோ ரூ.80க்கும் ஏலம் போனது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ.400க்கும், சம்பங்கி கிலோ ரூ.60க்கும், அரளி கிலோ ரூ.110க்கும், ரோஜா கிலோ ரூ.240க்கும், பெங்களூரு மல்லி கிலோ ரூ.280க்கும், செவ்வந்தி கிலோ ரூ.80க்கும் ஏலம் போயின.

கிடுகிடுவென உயர்ந்த பூ விலை

பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளதாகவும், வருங்காலங்களில் திருமண முகூர்த்த நாட்கள் இருப்பதால் இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:10 லட்சம் சம்பளத்தை உதறி இயற்கை விவசாயத்தில் தூள்கிளப்பும் பொறியாளர்

ABOUT THE AUTHOR

...view details