கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே காந்திசெல்வன் என்பவர் கரோனா வைரஸ் போல வேடமிட்டு காவல் துறையினரின் ஒத்துழைப்போடு, வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை வேப்பிலையால் அடித்து, முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை விளக்கினார்.