நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த லாரியில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் லாரியில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பறக்கும் படை அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது லாரி ஓட்டுநர், தான் அந்தப் பணத்தைக் கோழிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாகக் கூறி அலுவலர்களிடம் ஒப்படைக்க மறுத்தார். இதனால் ஓட்டுநருக்கும் பறக்கும் படையினருக்கும் இடையே சுமார் அரைமணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.