நாமக்கல்:சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி கவிதா மற்றும் உறவினர்களான சுதா, கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, 4 வயது குழந்தை உட்பட ஏழு பேர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு காரில் சென்று விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை ரவி ஓட்டி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள படமுடி பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே காரில் வந்து கொண்டிருந்தபோது ரவி தூக்க கலக்கத்தில் இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ரவியின் மனைவி கவிதா, சுதா, கந்தாயி, குஞ்சம்மாள், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாந்தியை மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது அவரும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பெண்கள் பலியாகினர். ஐந்து பேர் உடலும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரவி மற்றும் 4 வயது சிறுமி ஆகிய இருவர் மட்டும் உயிர் தப்பி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கேரள மாணவி பலி!