நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தின்னனூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சாமிதுரை. இவர் கடந்த அக். 6ஆம் தேதி தேவனூர் நாடு பகுதியில் முகம் சிதைந்து, உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வாழவந்தி நாடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்து, தற்போது நடத்திய விசாரணையில் அவரது மருமகன்கள் இரண்டு பேர் உள்பட ஐந்து பேர் சேர்ந்து சாமிதுரையை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.