நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஷ், கோட்டாட்சியர் அலுவலகத்தில் காந்தியடிகள் போல் வேடம் அணிந்து மனு தாக்கல் செய்தார்.
காந்தி வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல்: அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்! - Namakkal Ahimsa is the founding leader of the Socialist Party
நாமக்கல்: நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஷ், காந்தியடிகள் போல் வேடம் அணிந்து மனு தாக்கல் செய்தார்.
காந்தி வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல்
கடந்த 1934ஆம் ஆண்டு நாமக்கல் நகருக்கு காந்தியடிகள் வருகை புரிந்தபோது, மலைக்கோட்டையில் உள்ள திட்டு ஒன்றில் பிரச்சாரம் செய்தார். அந்த இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய வேட்பாளர் ரமேஷ், சுமார் 2 கி.மி தூரம் சைக்கிளில் சென்று வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமாரிடம் மனுத்தாக்கல் செய்தார்.