நாமக்கல்: ராசிபுரம் அருகே பட்டாசு கடை உரிமையாளர் வீட்டில் கொசு பேட் பயன்படுத்திய போது எதிர்பாராத விதமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கண்ணன் (42).
இவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுபித்திரா (வயது 40). இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பட்டாசு தொழில் நடத்தி வரும் கண்ணன், தனது குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக குடோனில் இருந்து சிறிதளவு பட்டாசுகளை எடுத்து வந்து தனது வீட்டில் வைத்துள்ளார்.
அப்போது, கொசுத்தொல்லை காரணமாக கண்ணன் மாடியில் அமர்ந்து கொண்டு கொசு பேட்டை பயன்படுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக அதில் இருந்து நெருப்பு வெளிவந்ததாகவும், பட்டாசு வெடித்து தீ விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பட்டாசு வெடிப்பதை கண்ட கண்ணன் மாடியில் இருந்து தனது வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதையும் படிங்க:கால்நடை தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!