நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் தினந்தோறும் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம்பிரித்து அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகிறது. மக்காத நெகிழிக் கழிவுகள் நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.
இந்நிலையில், நேற்று இந்தக் குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவலறிந்ததும் விரைந்துசென்ற தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.