நாமக்கல்:தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஒவ்வொரு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் திருமுருகன் என்பவர் ராசிபுரத்தில் உள்ள சாக்கு பை தயாரிக்கும் நிறுவனத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு அதன் உரிமையாளர் நல்வினை செல்வன் இல்லாததால் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தீயணைப்பு வீரர் தீபாவளிக்கு பார்க்கனும் என கேட்டுள்ளார். அதற்கு அரசாங்கத்தில் சம்பளம் சரியாக தருகிறதா? ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த நபர் செல்போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
லஞ்சம் கேட்கும் தீயணைப்பு வீரரின் ஆடியோ தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் கடந்த இரு நாள்களாக சோதனை நடத்தி வரும் நிலையில் தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் லஞ்சம் கேட்கும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஓடும் ரயிலில் இருந்து சக பயணியை தள்ளிவிட்டு கொடூரம்