நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்குச் சொந்தமான காடு, அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான வனப்பகுதியில் தீ! - காட்டுத்தீ
நாமக்கல்: லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான வனப்பகுதியில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
namakkal veterinary college fire accident
இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் வனத் துறை, நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத் துறையினர், கால்நடை மருத்துவக் கல்லூரி பணியாளர்களுடன் இணைந்து தீயை அணைத்தனர்.
தீ தொடர்ந்து பரவிய நிலையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.