தமிழ்நாடு வாள்சண்டை போட்டி கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வாள் சண்டை போட்டி கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வாள் சண்டை போட்டியை கடந்த 19ஆம் தேதி நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தொடங்கி வைத்தார்.
'குழந்தைகள் பப்ஜி விளையாட அனுமதிக்கக் கூடாது' - எஸ்பி அருளரசு அறிவுரை
நாமக்கல்: "பப்ஜி கேம்களால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அதனை விளையாட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது" என்று எஸ்பி அருளரசு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளுக்கான மாநில அளவில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வாள் சண்டை போட்டியின் இறுதிநாளில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பெற்று ஆல் ஓவர் சாம்பியன் பட்டத்தை வென்றது. வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிசுகளை வழங்கினார்.
இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், "குழந்தைகள் அனைத்து விளையாட்டுகளையும் கற்க வேண்டும். வீட்டினுள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து பல சாதனைகளை புரியவேண்டும். பப்ஜி போன்ற மொபைல் விளையாட்டுகளால் பெரும்பாலன குழந்தைகள் அதனுள் மூழ்கி கிடப்பது வேதனையளிக்கிறது. பெற்றோர்கள் அதனை அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளை இந்த வயதில் வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். பப்ஜி கேம்களால் மூளையில் சிந்திக்கும் அளவு குறைந்து விடுகிறது. விடுமுறை காலங்களில் ஏதேனும் ஒரு விளையாட்டிற்கு பயிற்சி அளிக்க வேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்தார்