தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி: உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி

உயர்மின் அழுத்தம் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 10, 2021, 4:43 AM IST

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து புகழூர் வரை 800 கிலோ வாட் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளுக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அரசு அறிவித்தபடி வழங்க வேண்டிய நிவாரணத் தொகை வழங்காமல் நிறுத்தி உள்ளது. இந்த நிலையில், நில மதிப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், விவசாய நிலங்களில் உள்ள மரங்கள், உயர் மின்னழுத்த கோபுரம் போடும் போது இருந்த பயிர்கள் போன்றவற்றிற்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருவதைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பட்லூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கீழ் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பட்லூர் பகுதி விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஆக்கிரமிப்பை அகற்றிய பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details