மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், டெல்லியை முடக்கி போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளை ஆதரித்து, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிசம்பர் 18) உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
அதேபோன்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராசம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.