நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த கல்யாணியைச் சேர்ந்தவர்கள் பழனிவேல், அண்ணாதுரை. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலப் பிரச்சினை தொடர்பாகத் தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் அண்ணாதுரையின் குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்து அங்கு வந்த பழனிவேல் உள்ளிட்ட சிலர், அண்ணாதுரையை அடித்து கொலை செய்துவிட்டு, தன்னை தம்பி அடித்துவிட்டதாக உறவினர்களுக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துவிட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்துள்ளார்.