நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், கூத்தம் பூண்டி ஊராட்சி சாயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (55). ரிக் இயந்திர உரிமையாளர். இவரது மனைவி நிர்மலா (47) இவர்களுக்கு நவீன் குமார் (25) என்ற மகனும் கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் செளமியா (21) என்ற மகளும் உள்ளனர். மகன் நவீன் குமார் தொழில் நிமிர்த்தமாக சோலாப்பூர் சென்றிருந்தார்.
இந்நிலையில்,அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செளமியா தனது சித்தப்பா அன்பழகன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு; அப்பா, அம்மா, நான் என மூவரும் கடன் தொல்லையால் சல்பாஸ் என்ற மாத்திரையை விழுங்கியதாகக் கூறியுள்ளார்.
விரைந்து வந்து அன்பழகன் பார்த்த போது நிர்மலா இறந்து போயிருப்பதையும், அண்ணன் மோகன், அவரது மகள் செளமியா ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும் கண்டு, இருவரையும் சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு சென்ற போது மோகன் வழியில் இறந்து விட, செளமியாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.