தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் அருகே கல்குவாரியில் வெடி விபத்து! - நாமக்கல் கல்குவாரி

நாமக்கல்: கல்குவாரியில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், குவாரியில் பணியாற்றிய தொழிலாளியின் 10 வயது மகள் உயிரிழந்தார்.

Explosive blast accident
Explosive blast accident

By

Published : May 27, 2020, 11:44 PM IST

நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் சுபாஷ் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியை நாமக்கல்லைச் சேர்ந்த கிட்டு என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இங்கு வெடி வைத்து பாறைகளைத் தகர்த்து வருவது வழக்கமாக உள்ளது. இந்த குவாரியில் மூர்த்தி என்ற தொழிலாளி பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று இரவு பாறைகளைத் தகர்ப்பதற்கு வெடி வைத்துள்ளனர். அப்போது தொழிலாளி மூர்த்தியின் 10 வயது மகள் நந்தினி மற்றும் 5 வயது மகன் சவுந்தர்ராஜன் ஆகிய இருவரும் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கல்குவாரியில் வெடி விபத்து

அப்போது வெடி வெடித்ததில் கற்கள் சிதறி சிறுமியின் மீதும் அவரது சகோதரர் மீதும் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். அவரது சகோதரர் சவுந்தர்ராஜன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details