தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்... - முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சொத்து‌ ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

By

Published : Jul 20, 2022, 1:53 PM IST

நாமக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான தங்கமணி வீட்டில் கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், தங்கமணி 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமைச்சர் பதவியில் இருந்தபோது 4.85 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 2.30 கோடி ரொக்கப்பணம், 1.30 கிலோ தங்கம், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ஹோர்டு டிஸ்குகள், வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

இதன் அடிப்படையில், சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து அதனை மதிப்பிடும் பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினருடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள் , வருவாய் துறை அலுவலர்கள் இன்று (ஜூலை 20) ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக, 15க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தங்கமணி வசித்து வரும் பள்ளிபாளையம் அடுத்துள்ள கோவிந்தபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் உள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து அதனை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் - வங்கிகள் ஏற்றுக்கொண்டதாக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details