நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கண்ணூர்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசி. கணவரை இழந்த இவருக்கு செளந்தர்யா (20), சுபசெளமியா (15) ஆகிய மகள்களும், மணிகாந்த் (14) என்ற மகனும் உள்ளனர்.
கணவனை இழந்த தமிழரசி தையல் தொழில் மூலம் தனது மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் ஆன்லைன் கல்வியால் பள்ளி படிப்பை மேற்கொள்ள இயலாமல் தவித்த 11 ஆம் வகுப்பு மாணவி சுபசெளமியா குறித்து நேற்று முன்தினம் (செப்.3) ஈடிவி பாரத்தில் செய்தி வெளியானது. இதனைத்தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் ஏழை மாணவி சுபசெளமியாவுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வழங்கினர்.