கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பணிக்காக 120 கார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. கார் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வாடகை பேசப்பட்டதாக தெரிகிறது. அதன்படி ரூபாய் 12 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட கார்களுக்கு வாடகை பாக்கி! - election work car rent
நாமக்கல்: தேர்தல் பணியில் ஈடுபட்ட கார்களுக்கு வாடகை தராமல் இழுத்தடிக்கும் தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கார் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
![தேர்தல் பணியில் ஈடுபட்ட கார்களுக்கு வாடகை பாக்கி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4529249-238-4529249-1569243839597.jpg)
election work car drivers give petition to collector
இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த நிலையில் கார் உரிமையாளர்களுக்கு தரவேண்டிய வாடகைப் பணத்தை தேர்தல் அலுவலர்களிடம் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், ஐந்து மாதங்கள் ஆன நிலையில் இன்றுவரை வாடகை தராமால் தேர்தல் அலுவலர்கள் இழுத்தடித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வாடகையை பெற்றுத் தருமாறு 50க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.