தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு - வாக்குப்பதிவு

நாமக்கல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு

By

Published : Mar 16, 2019, 7:45 PM IST

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட சார் ஆட்சியாளர் கிரந்தி குமார் பதி தலைமையில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் எவ்வாறு வாக்களிப்பது என பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விவி பேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு சார் ஆட்சியாளர் எடுத்துரைத்தார்.பின்னர் பேருந்தில் சென்று பயணிகளிடமும் வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details