நாமக்கல்:நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி ரூ.5.55 காசுகளாக இருந்த முட்டை விலை, இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு (2022) முட்டை விலை ரூ.5.50 காசுகளாக இருந்தது. அதுவே முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக இருந்தது. ஆனால் ஜன.1-ம் தேதி ரூ.5.55 காசுகளாக இருந்த முட்டை விலை, தற்போது அதையும் தாண்டி இன்று (ஜன.9) ரூ.5.65 காசுகளாக உயர்ந்துள்ளது. இது கோழிப்பண்ணை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருக்கிறது.