தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘முட்டையின் விலை 20 காசுகள் உயர்வு’ - நாமக்கல்லில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்வு

நாமக்கல்: இன்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டையின் விலை 20 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டையின் விலை 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் முட்டியின் விலை 20 காசிகள் உயர்வு
நாமக்கல்லில் முட்டியின் விலை 20 காசிகள் உயர்வு

By

Published : Feb 11, 2021, 11:16 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (பிப். 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாயிலிருந்து‌ 20 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறியதாவது, “வட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் குறித்த அச்சம் பொதுமக்களிடையே குறைந்துள்ளதால்‌ முட்டை விற்பனை அங்கு அதிகரித்துவருகிறது.

மேலும், தமிழ்நாட்டிலும் முட்டைகளின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளால், முட்டையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆமை முட்டைகளைச் சேகரிக்கும் பணியில் வனத் துறை!

ABOUT THE AUTHOR

...view details