தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2020, 12:24 PM IST

ETV Bharat / state

நிவர் புயல் எதிரொலி: முட்டை விலை குறைந்தது

நாமக்கல்: முட்டை விலை, 4 நாட்களில் 50 காசுகள் சரிந்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை
முட்டை

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐயப்பன் கோவில் சீசன், கார்த்திகை தீபத்தை ஒட்டி அசைவம் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் முட்டை விற்பனை சரிந்து அதிகளவு தேக்கம் அடைந்தது.

இதனால் நவம்பர் 23ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்ளமுதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் புயல், மழை காரணமாக முட்டைகள் அனுப்புவது தடைபட்டுள்ளதால் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது.

இதனால் இன்று மேலும் 25 காசுகள் குறைப்பட்டது. இதனால் பண்ணை கொள்ளமுதல் விலை 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் குறைந்துள்ளது.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில் முட்டை அதிகளவு தேக்கமடைந்ததால் விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் முட்டையின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details