நாமக்கல்: தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்துவருகிறது. இதையடுத்து ஐந்து கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி 4.50 கோடி முட்டைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 5 ரூபாயிலிருந்து 15 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 85 காசுகளாக விலை நிர்ணயம்செய்யப்பட்டது. கடந்த மூன்று நாள்களில் 35 காசுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்களிடம் கேட்டபோது, "தமிழ்நாடு, கேரளாவில் முட்டையின் தேவை கடந்த ஒரு வார காலமாகக் குறைந்துள்ளது.
அதேபோல் வெயிலில் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், பண்ணைகளில் மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் கீழ் இருந்த முட்டை உற்பத்தி, 10 விழுக்காடு வரை அதிகரித்து தற்போது மூன்று கோடியே 75 லட்சம் வரை உற்பத்தியாகிவருகிறது. இதனால் விலை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களிலும் மேலும் விலை குறையக்கூடும்” என்றனர்.
இதையும் படிங்க:'அந்த மனசுதான் சார்' - டெலிவரி பாய்க்கு 'பைக்' வாங்கிக் கொடுத்த வாடிக்கையாளர்