அக்டோபர் மாதத்தில் முட்டை விலை ஐந்து ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட நிலையில், விலை அதிகம் என்பதால் முட்டைகளின் விற்பனை சரிந்து அதிக அளவு தேக்கம் அடைந்தது.
இதனையடுத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் நவம்பர் 5ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
விலை குறைக்கப்பட்ட நிலையிலும் விற்பனை அதிகரிக்காததால் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் இன்று (நவ.07) மீண்டும் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த மூன்று நாள்களில் 45 காசுகள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், முட்டை நுகர்வு குறைந்து போனதால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலையைக் குறைத்துள்ளதாகவும், தீபாவளிப் பண்டிகையின்போது விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.