நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 75 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தி, 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்தும், 2ஆம் தேதி 5 காசுகளும், 3ஆம் தேதி 5 காசுகளும் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 75 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்று (ஜூன் 4) மீண்டும் 5 காசுகள் உயர்ந்து, 3 ரூபாய் 80 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.