தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் உயர்ந்த முட்டை விலை - namakkal news

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Today egg price
Today egg price

By

Published : Feb 13, 2021, 10:11 AM IST

நாமக்கல்லில்‌ இன்று (பிப்.13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாயிலிருந்து ஒரே நாளில் 20 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 11ஆம் தேதி 20 காசுகள்‌ விலை உயர்த்தப்பட்டு முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக இருந்த நிலையில் இன்று (பிப்.13) மீண்டும் 20 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 40 காசுகளாக பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 6 நாட்களில் 50 காசுகள் விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும் போது, வடமாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரிப்பு, தமிழ்நாட்டில் 9, 11ஆம் வகுப்புகள் தொடங்கி உள்ளதால் சத்துணவிற்கு கூடுதலாக முட்டை அனுப்புவது உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...ஆட்டோவில் ஏறியபின் காணாமல்போன பள்ளி மாணவி - சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் காவல் துறையினர்

ABOUT THE AUTHOR

...view details