நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் அதிமுக வேட்பாளருக்கு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் ஆதரவு - பண்ணையாளர்கள் ஆதரவு
நாமக்கல்: தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளத்தினர் நாமக்கல்லில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளத்தினர் நாமக்கல்லில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணியை சந்தித்து சங்க துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணி தெரிவித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.காளியப்பனுக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், கோழிப்பண்ணையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மக்காச்சோள இறக்குமதிக்கான அனுமதி பெற்றதர டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை அதிமுக எம்பி சுந்தரம் சந்தித்து, மக்காச்சோளம் இறக்குமதிக்கு அனுமதி பெற்றுத் தந்தார். இதற்கு நன்றி தெரிவித்தும், அதோடு மட்டுமல்லாமல் வரும் மக்களவைத் தேர்தலில் தாங்கள் அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவை அளிக்க உள்ளோம், என்றும் அவர் கூறினார்.