நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு ஈடுசெய்வது, தீவனப் பற்றாக்குறையை எவ்வாறு சரிசெய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முட்டை விலை பற்றி தினந்தோறும் ஆலோசிக்க வேண்டும் - கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வலியறுத்தல் - Poultry Farmers Association
நாமக்கல்: முட்டை மற்றும் கோழிகளின் விலை நிர்ணயத்தை தினந்தோறும் கோழிப்பண்ணையாளர்களிடம் கலந்தாலோசனை செய்த பிறகே விலை நிர்ணயத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், நாமக்கல் மக்களவை உறுப்பினருமான சின்ராஜ், ”கோழிப்பண்ணையாளர்களுக்கு தினந்தோறும் தேவைப்படுகின்ற தீவனத்தின் பற்றாக்குறை காரணமாகவும் தீவனத்தின் விலை ஏற்றத்தினாலும் பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர். பல மாதங்களாக முட்டை கொள்முதலுக்கும் சரியான விலை கிடைக்காத காரணத்தினாலும் கோழி ஒன்றிற்கு 45 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
மக்காச்சோளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். கோழிப்பண்ணையாளர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை ஓராண்டிற்கு பின்னர் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். முட்டை மற்றும் கோழிகளின் விலை நிர்ணயத்தை தினந்தோறும் கோழிப்பண்ணையாளர்களிடம் கலந்தாலோசனை செய்த பிறகே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சத்துணவு முட்டை விலை நிர்ணயம் செய்ய கமிட்டி ஒன்றை அமைக்கவேண்டும்” என்றார்.