தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய உச்சம் எட்டிய முட்டை விலை - எவ்வளவு தெரியுமா! - புதிய உச்சம் எட்டிய முட்டை விலை

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

egg
egg

By

Published : Jun 26, 2022, 9:35 PM IST

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை நேற்றைய(ஜூன் 25) நிலவரப்படி 5 ரூபாய் 35 காசுகளாக இருந்தது.

இன்று 5 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக, 2020ஆம் ஆண்டு முட்டை விலை அதிகபட்சமாக 5 ரூபாய் 25 காசுகளாக இருந்தது. அதன் பிறகு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கோழித்தீவனம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வே, முட்டையின் கொள்முதல் விலை அதிகரிப்புக்குக் காரணம் என்று பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் விற்பனை விலை 50 பைசா முதல் 2 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - 15 ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details