நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா கர்நாடகா ஆந்திரா உள்பட பல வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் நோய் காரணமாகவும், கோவிட்-19 வைரஸ் வதந்திகள் காரணமாகவும் கோழி மற்றும் முட்டைகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.