தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 35 காசுகள் சரிவு - In Namakkal region, egg prices fell by 35 paise in a single day

நாமக்கல்: ஊரடங்கு காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் சரிவடைந்தது.

Egg and chicken rate reduced
Egg and chicken rate reduced

By

Published : Apr 22, 2021, 4:55 PM IST

நாமக்கல் மண்டலத்தில் ஐந்து கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்துவருகிறது.

Egg and chicken rate reduced
இந்நிலையில் இன்று முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையினை 4 ரூபாய் 85 காசுகளிலிருந்து 35 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதேபோல் கறிக்கோழி விலையும் 14 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை விலை 35 காசுகள் சரிவு
இந்தத் திடீர் விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்களிடம் கேட்டபோது, கரோனா நோய்ப் பரவலால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

அதேபோல் வட மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் முட்டை, இறைச்சி விற்பனை பாதிக்கப்பட்டு பண்ணைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே ஒரே நாளில் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களிலும் விலை மேலும் குறையக்கூடும் என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details