நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை வீரன் கோவில் அருகில் உள்ள சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். ஆனால் கேரளாவில் இடது சாரியை எதிர்த்து காங்கிரஸ் நிற்கிறது. இது சந்தர்ப்பவாத கூட்டணியாக இருப்பதால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால் எப்படி எதிர் அணியால் நல்ல ஆட்சியை தர முடியும். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது.