தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை' - அமைச்சர் தங்கமணி - அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: தங்கள் மீது கொண்டுள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருவதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Minister Thangamani
Minister Thangamani

By

Published : Nov 29, 2020, 10:04 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் இன்று (நவம்பர் 29) நடைபெற்றது. இதில், பங்கேற்ற கட்சி நிர்வாகிகளிடம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து‌ அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "நிவர் புயலை விட வேகமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. எங்கள் மீது கொண்டுள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். எங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. கொங்கு மண்டலத்தில் திமுக பின்தங்கி உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசின் வளர்ச்சித் திட்ட பணிகள் எப்போதும் பின்தங்கவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details