நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 19) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்சார துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் 108 அவசரகால இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
'அதிமுக - பாஜக கூட்டணி பலமாக உள்ளது' - அமைச்சர் தங்கமணி - அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வாகனம்
நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, கூட்டணி பலமாக உள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் இதுவரை மின்துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மழை, கரோனா காரணமாக மின்தேவை குறைவாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 20 ஆயிரம் கோடி உதவி தொகையை, மின் வாரியம் வழங்க வேண்டிய நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்க உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது. அரசுமுறை பயணமாக தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மாநில அரசு சார்பில் வரவேற்பதோடு தோழமை கட்சி என்ற முறையில் அரசு விழாவிலும் பங்கேற்போம்" என்று தெரிவித்தார்.