கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, நாமக்கல் வருகை தந்த ராஜேஷ் குமாருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மோகனூர் பரமத்தி சாலை சந்திப்பில் உள்ள, அண்ணா சிலைக்கு ராஜேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அப்போது, திமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை சந்திப்பில், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி நாட்டு வெடிகளை இரு சாலைகளுக்கு இடையில் தோரணமாகக் கட்டி, தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர்.