நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் கொல்லிமலைக்கு, கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 15ஆம் தேதி தொடங்கி, உள்ளூர், வெளியூர் மக்கள் சுற்றுலா வரத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கியதை அடுத்து, கொல்லி மலைக்கு வருபவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று கொண்டு வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து காரவள்ளி, முள்ளிக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையிடப்பட்டு இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொல்லிமலை அடிவாரத்தில் 300 ரூபாய்க்கு இ-பாஸ் விற்பனை! - கொல்லிமலை சுற்றுலா பயணிகள்
நாமக்கல் : கொல்லிமலை அடிவாரத்தில் சில தனியார் மையங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் 300 ரூபாய் பெற்றுக்கொண்டு இ-பாஸ் விற்பனை செய்து வருகின்றன.
Kollimalai
இந்த நிலையில், கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளியில் சில தனியார் ஆன்லைன் மையங்கள் அமைத்து கொல்லிமலைக்குச் வருபவர்களிடம் 300 ரூபாய் பெற்றுக்கொண்டு இ-பாஸ்கள் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.