தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் பொதுமக்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு! - Corona infection

பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாராணவீரன் போக்குவரத்து காவலர்களுடன் கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

DSP Awareness
DSP Awareness

By

Published : Oct 9, 2020, 10:07 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூரில் சாலை விதிகளை கடைப்பிடிப்போருக்கு டிஎஸ்பி பேனாவை பரிசாக வழங்கினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உத்தரவின்பேரில் பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாராணவீரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயவேல் உள்ளிட்ட குழுவினர் பரமத்திவேலூர் நான்கு ரோட்டில் கரோனா தொற்று தடுப்பு குறித்து முகக்கவசம், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு

தொடர்ந்து பொதுமக்களிடம் பேசும் போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். திருமணம், துக்க நிகழ்வுக்கு செல்லும்போதும், கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போதும் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

அதேசமயம், வெளியில் சென்று வீட்டுக்கு வரும்போது இரண்டு கைகளையும் சுத்தமாக கழுவ வேண்டும், உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்தால் தான் கரோனா தொற்று அதிகமாக பரவாமல் தடுக்க முடியும். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் இருசக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த 200 நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தும் இலவசமாக முகக் கவசங்களை டிஎஸ்பி வழங்கினார். மேலும் சாலை விதிகளை பின்பற்றுபவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பேனா பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க: பியூஷ் கோயலுக்கு மாற்றப்பட்ட பஸ்வானின் துறைகள்

ABOUT THE AUTHOR

...view details