நாமக்கல்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தானது காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துநரிடம் பயணச் சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே மது பிரியர் நடத்துநரை தாக்கியுள்ளார்.
பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியதையடுத்து பேருந்து சாலை ஓரமாக நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள், நடத்துநர் ஆகியோர் போதை ஆசாமியை தாக்கினர்.