தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த குடிநீர் - போக்குவரத்துப் பாதிப்பு!

By

Published : Oct 30, 2022, 6:12 PM IST

நாமக்கல்லில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்ததால் வானுயரத்திற்கு குடிநீர் சீறிப்பாய்ந்தது. இதனால் 3 லட்சம் லிட்டர் முதல் 5 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வீணானது.

நாமக்கல்லில் வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த குடிநீர்
நாமக்கல்லில் வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த குடிநீர்

நாமக்கல்: குமாரபாளையம் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் இருந்து திருச்செங்கோடு நகரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளுக்கு காவிரியிலிருந்து நீரேற்றம் செய்து, சுத்திகரிப்பு செய்து, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் நிலத்தடி வழியாக 30 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையோரமாக நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெப்படை அருகே உள்ள எலந்தைக்குட்டை பகுதியில், இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, உயரழுத்தம் காரணமாக குடிநீர் வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்தது. இதனால் வானவில்லே உருவானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் இந்த குடிநீர் குழாய் உடைப்பால் 3 லட்சம் லிட்டர் முதல் 5 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வீணானது.

இதனால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து தண்ணீர் அழுத்தத்தைக் குறைத்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நாமக்கல்லில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த குடிநீர்

இதையும் படிங்க:ஆரணியில் 1 கோடி ரூபாய் ஏலச்சீட்டு - ஏமாற்றிய தம்பதி தலைமறைவு

ABOUT THE AUTHOR

...view details