தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை கடித்துக் குதறும் வெறிநாய் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ - வெளியான சிசிடிவி வீடியோ

நாமக்கல்: ராசிபுரம் அருகே தெருவில் நடந்துச் சென்ற சிறுவனை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறும் காட்சி நெஞ்சை பதறவைக்கிறது.

dog bitten
dog bitten

By

Published : Jun 11, 2020, 5:03 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கி தெருவில் இன்று காலை சிறுவன் ஒருவன் நடந்து சென்றுள்ளான். அப்போது அங்கு வந்த நாய் ஒன்று அச்சிறுவனை கண்டதும் கடித்துக் குதறியது. நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக அச்சிறுவன் அலறும் சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ஒருவர் நாயை அடித்து விரட்டினார். வலி தாங்காமல் துடித்த சிறுவனை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நாய் கடித்ததில் சிறுவனின் கை மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுவனை நாய் கடித்த சம்பவம் அருகிலிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன.

தெருவில் சென்ற சிறுவனை கடிக்கும் வெறிநாய்

இங்குள்ள சில தெரு நாய்களுக்கு வெறிபிடித்துள்ளதாகவும் கடந்த மூன்று மாதங்களாகவே நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தெருக்களில் சுற்றும் வெறி நாய்களால் இரவு நேரங்களில் வருபவர்கள் மிகுந்த அச்சத்துடன் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெருநாய்களை பிடிக்க பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க:துணை நடிகையை ஏமாற்றிய நடிகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details