மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்ளுக்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் அண்ணா சிலை அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திமுக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.