சுயமரியாதை சூரியன் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவம்பர் 12) நடைபெற்றது. இந்த நூலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதை, தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
'கலை, இலக்கியத்தை அதிகாரத்தால் நசுக்க வேண்டாம்' - தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன்
நாமக்கல்: கலையும், இலக்கியமும் சுதந்திரத்தின் ஒளியை கொண்டுச் செல்வதாகவும், அதிகாரத்தின் கரத்தால் அதை நசுக்க முற்படுவது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று, திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் விமர்சித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழச்சி தங்க பாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை நீக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். கலையும், இலக்கியமும் அனைவரிடமும் சுதந்திரத்தின் ஒளியை கொண்டுச் செல்வதாகவும், அதிகாரத்தின் கரத்தால் அதை நசுக்க முற்படுவது இந்தியாவின் பன்முக தன்மை, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்றார்.
கலையையும் அரசியலையும் அதனுடைய சுதந்திர போக்குடன் இயங்க செய்வது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று தெரிவித்த தமிழச்சி தங்க பாண்டியன், அதில் தலையீட்டு நீக்குவது அழகல்ல என்றார்.