நாமக்கல் நகராட்சி 14ஆவது பெரியண்ணன் தெருவில் நகர திமுக சார்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு கொடி கம்பம் அதற்கான பீடம் மற்றும் கல்வெட்டு அமைக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக அப்பகுதியில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில் பீடம் மட்டும் அவ்விடத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பீடத்தில் உள்ள கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதி திமுக பொறுப்பாளர் சரவணன் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தின் பீடப்பகுதியில் உள்ள கல்வெட்டை சேதபடுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மரணம்? - இறந்தவர் உறவினர்களிடம் விசாரணை