தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டூப் ஸ்டாலின் காலில் விழுந்து குறைகளை கூறிய மூதாட்டி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே 'ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போராரு' என்ற திமுகவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று (மார்ச் 11) நடைபெற்றது. அப்போது டூப் ஸ்டாலின் அமர்ந்திருக்க, அவரை சுற்றி நடன குழுவினர் ஆடிக் கொண்டிருந்தனர்.
இது தெரியாமல் மூதாட்டி ஒருவர் உண்மையான ஸ்டாலின் என நினைத்து டூப் ஸ்டாலின் காலில் விழுந்து குறைகளை கூறினார். அதற்கு டூப் ஸ்டாலினும் தான் ஆட்சிக்கு வந்ததும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலை -கமல்ஹாசன்