இது குறித்து அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ”நான் வெற்றிபெற்றால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற்றப்படும். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான தொழில்களான முட்டை ஏற்றுமதியும், லாரி போக்குவரத்து தொழிலும், ஜவுளித் தொழிலும் உள்ளது. தற்போது இந்தத் தொழில்கள் அனைத்தும் நலிவுற்றுள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஜவுளித் தொழில் மிகவும் முடங்கியுள்ளது. நான் வெற்றிபெற்றால் இதில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.
ராஜவாய்க்கால் பிரச்னையும் முட்டை உற்பத்தியில் உள்ள பிரச்னைகளும் களையப்பட்டு தீர்வு காணப்படும். அதேபோல் காவிரி ஆற்றின் கரையோரம் தடுப்பணைகளை அமைத்து விவசாய பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும். இவையனைத்துமே தற்போது நாமக்கல் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. எனவே அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.