நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகன்றன.
அதன்படி, நாமக்கல்லில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மஜீத் வீதி, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் லத்துவாடி உள்ளிட்டப் பகுதிகளில் செயல்பட்டுவரும் 6 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், 2 அஞ்சலகங்கள், 2 காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட 12 நிறுவனங்களை மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என மாவட்ட கோட்டாட்சியர் கோட்டை குமார் உத்தரவிட்டுள்ளார்.